தலைவி கூற்று

460. பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான்

இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா

ததை இலை வாழை முழுமுதல் அசைய

இன்னா வாடையும் அலைக்கும்

என்ஆகு வன்கொல் அளியென் யானே.

தோழி பாணனுக்கு சொன்னது

471. எவ்வளை நெகிழ மேனி வாடப்

பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத்

துறந்தோன் ...(நும் குருசில்)

பாணன் தோழிக்கு சொன்னது

474. மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்

செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு

கதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச்

சென்றவர்த் தருகுவல் என்னும்

நன்றால் அம்ம பாணனது அறிவே.

தலைவன் பாணனுக்கு சொன்னது

478. நீடினம் என்று கொடுமை தூற்றி

வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து

யாம்வெம் காதலி நோய்மிகச் சாஅய்ச்

சொல்லியது உரைமதி நீயே

முல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே.

பாணன் தலைவனுக்கு சொன்னது

480. நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு

நீயும் குருசிலை யல்லை மாதோ

நின்வெம் காதலி தனிமனைப் புலம்பி

ஈரிதழ் உண்கண் உகுத்த

பூசல் கேட்டு மருளா தோயே.

தலைவன் தேர்பாகனுக்கு சொன்னது

483. ஆறுவனப்பு எய்த அலர்தா யினவே

வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே

முன்னுறக் கடவுமதி பாக

நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே.

தலைவன் தலைவிக்கு சொன்னது

492. நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்

நன்னுதல் நாறும் முல்லை மலர

நின்னே போல மாமருண்டு நோக்க

நின்னே உள்ளி வந்தனென்

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே.